தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ் – உதயநிதி ஸ்டாலின்
எழுத்து , இயக்கம் – சீனு ராமசாமி
இசை – என்.ஆர். ரகுநந்தன்
பாடல்கள் – வைரமுத்து
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு – மு. காசிவிஸ்வநாதன்
வசனம் – சீனு ராமசாமி, ஜெயமோகன்
மக்கள் தொடர்பு – நிகில்
நடிப்பு – விஷ்ணு, சுனைனா, சரண்யா, நந்திதா தாஸ், பூ ராம், அருள்தாஸ், அழகம் பெருமாள், தம்பி ராமையா, பிளாக் பாண்டி, வடிவுக்கரசி, யோகி தேவராஜ் மற்றும் பலர்.
கதை
கடலும் கடல் சார்ந்த ‘நெய்தல்’ இடத்தை மையமாக வைத்து மீனவனாகத் துடிக்கும் ஒருவனின் கதையை இயல்பான விதத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
மீனவரான பூ ராம், சரண்யாவின் மகன் விஷ்ணு. மற்றவர்களிடம் பிச்சை எடுத்தாவது குடிக்கும் பழக்கம் கொண்டவர். எந்த வேலைக்கும் போகாமல் குடி, குடியென்று குடித்துக் கொண்டிருப்பவரை ஊரே உதாசீனப்படுத்துகிறது. இப்படிப்பட்டவர் கண்ணில் ஒரு நாள் படுகிறார் ‘இயேசு’வுக்கு ஊழியம் செய்யும் சுனைனா. விஷ்ணு மீது ஒரு நாள் கை வைத்து ஜெபம் செய்யும் சுனைனா மீது காதல் கொள்கிறார் விஷ்ணு. குடி பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் விஷ்ணுவுக்கு, எந்த வேலையும் இல்லாத காரணத்தால் சுனைனாவை திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார் சுனைனாவின் பெரியம்மா. மீன் பிடி தொழிலுக்கு செல்ல நினைக்கும் விஷ்ணுவுக்கு அவருடைய பிறப்பைப் பற்றி சொல்லி ஊரார் தடையாக இருக்கிறார்கள். எப்படியாவது சொந்த படகு வாங்கி மீன் பிடிக்கச் செல்வதாக சவால் விடுகிறார் விஷ்ணு. அவர் சவாலை நிறைவேற்றினாரா, சுனைனாவை திருமணம் செய்தாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.
பாடல்கள் விவரம்
இசை – என்.ஆர். ரகுநந்தன், பாடல்கள் – வைரமுத்து
1. மீனுக்கு…
பாடியவர்கள் – விஜய் பிரகாண், ஹரிணி
2. பற..பற…
பாடியவர் – ஜி.வி. பிரகாஷ்குமார்
3. தேவன் மகளே…
பாடியவர்கள் – வி.வி. பிரசன்ன, சைந்தவி
4. இரத்தக் கண்ணீர்…
பாடியவர் – ஹரிஷ் ராகவேந்திரா
5. பற..பற…
பாடியவர் – ஷ்ரேயா கோஷல்
6. யார் வீட்டு…
பாடியவர்கள் – ஆனந்த் , ஆரவிந்த், தக்ஷன்
7. பற பற…
பாடியவர் – சின்மயி