சாட்டை

  • யாரிப்பு – ஷாலோம் ஸ்டுடியோஸ் – பிரபு சாலமன், ஜான் மேக்ஸ்
  • கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம். அன்பழகன்
  • இசை – டி. இமான்
  • பாடல்கள் – யுகபாரதி
  • ஒளிப்பதிவு – ஜீவன்
  • படத்தொகுப்பு – நிர்மல்
  • நடனம் – நோபள்
  • கலை – வைரபாலன்
  • ஸ்டன்ட் – எம்.கே. லீன்
  • மக்கள் தொடர்பு – மௌனம் ரவி

நடிப்பு – சமுத்திரக்கனி, யுவன், மகிமா, சுவாசிகா, தம்பி ராமையா, ஜுனியர் பாலையா, பாவா லட்சுமணன், ரோஹித் பாலையா, கருத்தபாண்டி, சதீஷ் மற்றும் பலர்.

கதை

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, வந்தாரங்குடி என்ற ஊருக்கு மாற்றலாகி வருகிறார் ஆசிரியரான சமுத்திரக்கனி. வந்தாரங்குடி பள்ளியில் ஆசிரியர்களின் நிலமையும், மாணவ, மாணவிகளின்  சரி வர இல்லாததைக் கண்டு இரண்டையும் திருத்த முயல்கிறார்.

தலைமை ஆசிரியரான ஜுனியர் பாலையா, சமுத்திரக்கனிக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பிக்க, உதவி தலைமை ஆசிரியரான தம்பி ராமையா இதைக் கண்டு பொறுக்க முடியாமல் ‘அரசியல்’ பண்ண ஆரம்பிக்கிறார். இதனிடையே  12ம் வகுப்பு ஒன்றுக்கு வகுப்பு ஆசிரியராக பொறுப்பு ஏற்கும் சமுத்திரக்கனி அந்த அடங்காத மாணவர்களை எப்படி தன் அன்பால் அற்புதமான மாணவர்களாக மாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.