- தயாரிப்பு – கம்பெனி புரொடக்ஷன்ஸ் – எம்.சசிகுமார்
- இயக்கம் – எஸ்.ஆர்.பிரபாகரன்
- இசை – என்.ஆர்.ரகுநந்தன்
- ஒளிப்பதிவு – ச. பிரேம்குமார்
- படத்தொகுப்பு – வி. டான்போஸ்கோ
- மக்கள் தொடர்பு – நிகில்
நடிப்பு – எம். சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், சூரி, அப்புக்குட்டி, நரேன், தென்னவன், துளசி சுஜாதா, நீது நீலாம்பரன் மற்றும் பலர்.
வெளியான தேதி – 14 செப்டம்பர் 2012
கதை
கண்டமனூரைச் சேர்ந்த சசிகுமார், சூரி, இனிகோ பிரபாகரன் நெருங்கிய நண்பர்கள். சீமனூத்தைச் சேர்ந்த லட்சுமி மேனனை காதலிக்கிறாரு காலேஜ்ல படிக்கிற இனிகோ பிரபாகரன். இவருக்கு, லட்சுமி கிட்ட காதலை சொல்ல தைரியமில்லாம, சசிகுமாரை துணைக்கு கூப்பிடறாரு…டெய்லி பஸ்ல காலேஜுக்குப் போற லட்சுமி மேனனை எப்படியாவது இனிகோவை காதலிக்க வைச்சிடலாம்னு சசியும் போறாரு. தொடர்ச்சியா முயற்சி நடக்குது.
ஒரு நாள், லட்சுமியை மடக்கி, சசி , நண்பன் இனிகோவுக்காக பேச, நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்னு சசியைப் பார்த்து சொல்லிடறாங்க லட்சுமி. அப்புறம் என்ன நண்பனை சமாதானப்படுத்திட்டு சசி, லட்சுமியை சின்சியரா லவ் பண்ண ஆரம்பிச்சிடறாரு…அப்ப நடக்கிற ஒரு எதிர்பாராத கொலைப் பழி சசிகுமார் மேல விழ, அப்புறம் நடக்கிறது எல்லாமே ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்டா வர்ற கிளைமாக்ஸ் .